tamilnadu

img

டுவிட்டர் பக்கத்தில் பாஜக பெயரை நீக்கிய ஜோதிராதித்யா....

போபால்:
அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்துதிடீரென பாஜக பெயரை நீக்கியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால் ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் என்று பரவலாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் கடைசியில் கட்சியின் மூத்தத் தலைவர் கமல்நாத் முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த ஜோதிராதித்ய சிந்தியா, அண்மையில் தமது ஆதரவு எம்எல்ஏக்கள் 24 பேருடன் பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து மத்தியப்பிரதேச காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தது.ஆனால், இங்கும் முதல்வர் சவுகானுக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுநிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் வெளிப்படையாக அவர்கள் எதுவும் கூறிக்கொள்ளவில்லை.

இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா, தமது டுவிட்டர் பக்க முகவரியில் இருந்த பாஜக என்ற பெயரை திடீரென நீக்கி உள்ளார். அதற்கு பதிலாக நான் ஒரு “பொதுச் சேவகன்,கிரிக்கெட் ஆர்வலன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், இதற்கு முன்பாக, காங்கிரஸ் மீதான அதிருப்தியையும், இப்படி டுவிட்டர் பக்கத்தில் இருந்த அடையாளத்தை நீக்கித்தான் வெளிப்படுத்தினார். அடுத்த சில நாட்களிலேயே பாஜகவுக்குத் தாவினார். மத்தியப்பிரதேசத்தில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், சிந்தியாவின் இந்த போக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பாஜகவினர் மத்தியில் பதற்றம் ஏற் பட்டுள்ளது.

;